Saturday, 3 December 2011

Silk Smitha சில்க் ஸ்மிதா





சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று.

வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை ( சில்க்கின் இயற்பெயர்) தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் அவர்.

அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.
அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த

அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.

தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்

தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

நடனத்தால் வெற்றி வாகை

1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. லயனம் (1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது.

இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.

மரணத்தை தழுவினார்

பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் திடீரென்று ஒருநாள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.



சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோடானு கோடி ரசிகர்களை கொள்ளை கொண்ட சில்க்கின் நிழலைக் கூட இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்

ள வித்யா பாலன் தொட முடியாது என்பது சில்க்கைத் தெரிந்தவர்கள் கூறும் கூற்று. இருப்பினும், சில்க்கின் வாழ்க்கையை ஒரு ரீவிசிட் செய்ய, நினைத்துப் பார்க்க இந்தப் படம் உதவலாம் என்று எதிர்பார்க்கலாம்.



thanks for tamil.oneindia.in

vlc media player 1.1.11 free download

kolaveri di song free download

Sunday, 27 November 2011

Why This Kolai Veri Song Free download Lyrics


Lyrics :
Yo Boys I Am Sing Song…
Soup Song..
Flop Song..
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Rythm Correct
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Maintain Please
Why This Kolaveri …………………………Aaa Di
Distance-La Moonu Moonu. Moonu Colour Whiteu.
White-U Background Night-U Night-U, Night-U Colour-U Black-U…
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
White Skin-U Girl-U Girl-U, Girl-U Heart-U Black-U,
Eyes-U Eyes-U Meet-U Meet-U, My Future-U Dark-U
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Mama Notes Edhuthuko, Appadiye Kaiyla Snacks Edhuthuko,
Pa Pa Pa Ppaan- Pa Pa Pa Ppaan- Pa Pa Pa Ppaan Pa Pa Ppan
Sariyaa Vaasi…
Super Mama Ready.. Oneee Twooo Three Four..
Whaa Wat-A Change Over Mama.
Ok Mama Now Tune Change-U.
Kaila Glassu..
Only English…
Handula Glass-U, Glass-La Scotch-U Eyes-U Full-Aa Tear-U
Empty Life-U Girl-U Come-U Life-U Reverse Gear-U
Lovvu Lovvu Oh My Lovvu, You Showed Me Bouv-U
Cow-U Cow-U Holy Cow-U, I Want You Hear Now-U
God-U I Am Dying Now-U, She Is Happy How-U
This-U Song-U For Soup Boys-U,
We Don’t Have Choice-U
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Why This Kolaveri Kolaveri Kolaveri Di




Wednesday, 23 November 2011

மூளைக்கு வேலை

ரோட்டில் ஒரு பையனும் பொன்னும் நடந்து போறாங்க.
 பையனோட மாமியார் பொண்ணோட மாமியாருக்கு அம்மா. 
அப்படின்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு? விடை கீழே










மாமா-மருமகள்






Wednesday, 16 November 2011

இரண்டு வரி ஜோக்குகள்


நண்பன் 1: என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

நண்பன் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா...........




உங்க மாமா வெளிநாடுக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.



உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.



நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது.

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும், ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும், அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

நீங்க ஆம்பிளையா இருந்தாலும் உங்க செல் நம்பர் (இந்தியாவில) '9′ ல தான் ஆரம்பிக்கும்.

ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும், ஆனா நம்ம பொண்டாட்டியோட ஃப்ரெண்ட …..?

என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்.





'அந்த மேஜை ரொம்ப வெட்க படுது .'
'ஏன்'
'அதுக்கு டிராயர் இல்லையே



 : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
 : சொத்தையோட போகணும் 



 : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
 : எதை வைத்து?
 : பேனாவை வைத்து தான் எழுதினேன்!



 : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
 : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். 



 : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
 : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
 : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! 



 கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
 தெரியலியே?
 சுவரொட்டி - தான்.

 : ????


ஏன் ஸ்கூட்டரை திருடினே...?" 

"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு 
அவசரப்படுத்தினாரு எசமான்..!"



ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். 

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், 
ஐயா.



















பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்கணுமா?

                         எத்தனையோ விதங்களில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதுபோன்ற போலி மனிதர்களை சந்திக்க நேரலாம். அவர்களை சாதுரியமாக கண்டுபிடித்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதோ சில வழிகள்… 

  
                பொய் பேசுபவரின் பேச்சில் சில மாற்றங்கள் தென்படும். குறிப்பாக அவர்களின் சத்தத்தில் முன்பைவிட மாறுதல் இருக்கும். அவர்கள் பேசும் விஷயத்தில், பொய் வரும் இடத்தில் அழுத்தம் கூடுதலாக இருக்கும் அல்லது அதை திரும்பத் திரும்ப வலிறுத்தி பேசுவார்கள். வியாபாரிகள் என்றால் ஒரே விலையை குறி வைப்பதுபோல மீண்டும் மீண்டும் கூறுவார்கள். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பேசுவதன் மூலம் அவர் சொல்ல வரும் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்

                  ஆனால், `அல்லது, தவிர, அப்படியிருக்க’ போன்ற வார்த்தைகளை பொய் பேசுபவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இதெல்லாம் அவர்களின் நோக்கத்தை தடுக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் `நான், எனக்கு, என்னுடைய’ போன்ற வார்த்தைகளையும் குறைவாக உபயோகிப்பார்கள். அதிகமாக கட்டுக்கதைகளைச் சொல்வார்கள், இணைப்பாக தங்களது சொந்த சங்கேத சொற்களையும் இடைஇடையே உச்சரிப்பார்கள்.

                      அவர்களிடம் எந்த விஷயத்தை பேசினாலும் நமக்கு சாதகமாக முடித்து தருவதுபோல் பதில் தருவார்கள். முகத்தில் புன்னகையை தவழ விட்டிருப்பார்கள். ஆனால் உங்களைக் கடந்து செல்லும் அடுத்த நிமிடம் `இரு உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று மனதிற்குள் எண்ணியபடி நகருவார்கள். அப்படிச் செய்பவர்களை முக பாவனையை வைத்து எளிதில் கண்டு பிடிக்க முடியும். உணர்வுகளை மறைக்கும் தன்மை முகத்திற்கு கிடையாது. எவ்வளவு அடக்கினாலும் முகத்தில் லேசாக பிரதிபலிக்கும். உண்மை சிரிபுக்கும், போலி சிரிப்புக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்தானே. அப்படியென்றால் அவர்களின் குட்டு உங்களிடம் எடுபடாது.

                  பொய்யர்கள் போலியாக சிரிப்பார்கள். அதை நன்றாக கவனித்தால் கண்டுபிடிக்கலாம். அதை நீங்கள் கண்டுபிடிப்பதுபோல் நடந்து கொண்டால் அவர்கள் இடத்தை காலி செய்ய தயாராகி நழுவ முயற்சிபார்கள். போலியாக சிரிப்பதுபோலவே பயப்படுவது, கோபப்படுவது, வெறுபதுபோல் நடிபது என்று எல்லாம் போலியாகவே செய்வார்கள்

                 அவர்களின் நடவடிக்கை மற்றவர்கள் முன்பு ஒருவிதமாகவும், யாருமில்லாத இடத்தில் மற்றொருவிதமாகவும் இருக்கும். அவர்களின் மனநிலை முகத்திற்கும்- உடலுக்கும், பேச்சு- சப்தத்திற்கும் ஒட்டாமல் தொடர்பின்றி தொங்கிக் கொண்டிருக்கும். 

                 ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்ல வந்தாலும் அதில் சில விஷயங்களை மறைத்துவிடுவார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஏதாவது விவகாரமான கேள்வி கேட்டால் அதை கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்பார்கள். 

                “இன்று உங்களுக்காக பொய் சொல்பவர்கள், நாளை அவர்களுக்காக உங்களையே ஏமாற்றத் துணிவார்கள்” என்று சொல்வதுண்டு. எனவே பொய் பேசுபவர்களிடம் கவனமாக இருங்கள்!